
நட்புக்காக…
Dezember 22, 2007
சிறு பருவத்தில் பார்த்து
வியக்க வைத்தது – உன் நட்பு
வாலிபப் பருவத்தில் பேசி
ரசிக்க வைத்தது – உன் நட்பு
துன்பத்தின் போது
கண்ணீர் துடைத்தது – உன் நட்பு
மகிழ்ந்த போது மனம்
மகிழ வைத்தது – உன் நட்பு
முதிர்ந்த பின்னும் என்றும்
தொடருமடி – நம் நட்பு
நட்புடன் இனியவள்