பணத்திற்காய் சீதனச் சந்தையில்
உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும்
ஆண் ஜாதியே- நாம்
உனக்காய் குரல் கொடுக்கவா?
இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம்
சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்…
பெண்ணே விழித்தெழு!
பேரம் பேசி தனது வாழ்க்கையை
விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா?
அவமானம்….. அவமானம்….
கேவலம் கேவலம் உன் நிலை கேவலம்
பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி
பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன்
நீ மட்டும் எந்த வர்க்கம்?
நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட
நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள்
மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள்
பணம் செலுத்தி,பல் இளித்து
பஞ்சனை நாங்கள் தேடவில்லை
மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்…









